April 17, 2014

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் தேனீக்களின் பங்கு


சில நாடுகளில் தேனீக்களை வைத்து விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தலை கண்டறியும் முறையை பின்பற்றுகின்றார்கள்.தேனீக்களின் மோப்ப சக்தி நாய்களின் மோப்ப சக்தியை விட பல மடங்கு அதிகம்.

 தேனீக்களை போதைப்பொருளை கண்டறிய வைக்க பயிற்சி அளிப்பது நாய்களுக்கு பயிற்சி அளிப்பதைவிட மிகவும் எளிதானது.மேலும் இதில் நேரமும் மிக குறைவாகவே ஆகிறது.

 தேனீக்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகின்றன என்று பார்ப்போம்.உதாரணத்திற்காக இங்கே கொகெய்ன் போதைப்பொருள் கடத்தலை எப்படி தேனீக்களை வைத்து கண்டிபிடிக்கின்றனர் என்று கூறுகிறேன்.

 குறிப்பிட்ட அளவில் தேனீக்களை பிடித்து வந்து அதனை தனித்தனியாக சிறுசிறு பெட்டிகளில்(Capsules) அடைத்து வைக்கின்றனர்.பின்னர் ஒவ்வொரு தேனீயாக எடுத்து கொகெய்ன் போதைப்பொருளின் வாசனையை நுகர வைக்கிறார்கள்.அவ்வாறு நுகர வைக்கப்படும் சமயத்தில் தேனீக்களுக்கு இனிப்பு சர்க்கரைப்பொருள் வழங்கப்படுகிறது.தேனீக்கள் அந்த சர்க்கரைப்பொருளை அதன் சிறிய நாக்கை வெளியே நீட்டி சுவைக்கும்.


பலதடவை இந்த செயல்முறை அனைத்து தேனீக்களும் தொடர்ந்து செய்யப்படுவதால், தேனீக்கள் எப்பொழுதெல்லாம் கொகய்ன் வாசனையை நுகர்கிறதோ அப்பொழுதெல்லாம் தானாக அதன் நாக்கை வெளியே நீட்டி சர்க்கரைப்பொருளை தேட ஆரம்பித்துவிடும்.இதுவே ஒரு அனிச்சை செயல்போல் தொடரும்.


இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட தேனீக்கள் அனைத்தும் ஒரு சென்சார்(Vasor) கொண்ட பெட்டியில்(கீழே படத்தில் உள்ளது போல்)வைத்து பூட்டப்படுகிறது.இப்பொழுது பயணி ஒருவர் ஒரு பெட்டியில் கொகய்ன் கடத்தி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.மேற்குறிப்பிட்ட தேனீக்கள் கொண்ட சென்சார் மெஷினை அந்த பயணியின் பெட்டி அருகே கொண்டு சென்றால் உள்ளே உள்ள தேனீக்கள் அனிச்சை செயலாக கொகய்ன் வாசனையை நுகர்ந்தவுடன் நாக்கை வெளியே நீட்ட ஆரம்பிக்கும்.சென்சார்கள் தேனீக்கள் நாக்கை நீட்டுவதை பதிவு செய்து கொகெய்ன் இருப்பதை உறுதி செய்கிறது.



கொகய்ன் மட்டுமில்லாமல் வேறு பல போதைப்பொருள்கள்,மருத்துவத்துறையில் கேன்சர் செல்களை கண்டறிதல்,நோய்தொற்றுகள்,வெடிகுண்டிகளை கண்டறிதல் என பல இடங்களிலும் பல பயன்களை தந்து கொண்டிருக்கின்றன தேனீக்கள்.




Facebook Comment Box

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...