September 10, 2013

விமானம் எவ்வாறு பறக்கிறது -1

                                 
                                          1903ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ரைட் சகோதரர்களான ஆர்வில் ரைட் மற்றும் வில்பர்ட் ரைட் இருவரும் இன்றைய விமானங்களுக்கு முன்னோடியாக 36மீட்டர்கள் தூரம் 62 வினாடிகள் வானில் பறந்து சாதனை படைத்தனர்.

இவர்கள் கண்டுபிடித்த அந்த விமானம் தொழில்நுட்ப ரீதியில் சிறந்து விளங்கியது.அறிவியல் வளர வளர விமான தொழில்நுட்பமும் வளர்ந்து இன்று மனிதர்களுக்கு பயனுள்ள வகையில் அதிக வசதிகள் கொண்ட விமானங்கள் வானில் உலா வருகின்றன.

சரி.இனி விமானத்தின் செயல்பாடுகளைப் பற்றி பார்ப்போம்.அதிக எடை கொண்ட விமானம் எவ்வாறு காற்றில் அனாசயமாக பறந்து செல்கிறது? இதை தெரிந்து கொள்வதற்கு முன் சில இயற்பியல் கோட்பாடுகளைப் பற்றி பார்த்து விடுவோம்.



முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பாய்ம இயக்கவியல்(Fluid Mechanics) கோட்பாடு.இயற்பியல், திரவ மற்றும் வாயுப் பொருட்கள் இரண்டையும் பாய்மங்களாக பிரிக்கிறது.

நீர்ச்சறுக்கு விளையாட்டோ அல்லது அதிவேக இஞ்சின் படகு போட்டிகளயோ நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.இல்லையெனில் சில ஜேம்ஸ்பாண்ட் படங்கள் அவ்வளவு ஏன் சில தமிழ் படங்களின் க்ளைமேக்ஸில் ஹீரோ-வில்லன் துரத்தும் காட்சிகளில் பயன்படுத்தப்படும் படகை நினைத்துக்கொள்ளுங்கள்.இந்த படகுகள் சில சமயம் காற்றில் மேலெழும்புவது போல செல்லும்.சில அதிவேக படகு போட்டிகளில் கூட சில படகுகள் வேகமாக செல்லும்போது படகின் முன்பக்கம் தூக்கியடிக்கப்பட்டு படகு கவிழ்ந்து போவதை பார்த்திருப்பீர்கள்.

இப்பொழுது பெர்னோலி சமன்பாடு( Bernoulli's principle) பற்றி சிறிது பார்த்துவிடுவோம்.

ஒரு பாய்மத்தில் வேகம் அதிகரிக்கும்போது அதே அளவிலான அழுத்தம் குறைகிறது


இப்போது பெர்னோலி சமன்பாட்டை மேற்சொன்ன அதிவேக இஞ்சின் படகுடன் பொருத்தி பாருங்கள்.அங்கே பாய்மமான நீரில் வேகம் அதிகரிக்க அதிகரிக்க படகின் அழுத்தம் குறைவதால் படகு நீரில் மிதக்கிறது.நீரில் வேகம் மிக அதிகமாக ஆகும்போது படகின் அழுத்தம் மிக குறைந்து மேல்நோக்கி தூக்கியடிக்கப்பட்டு படகு கவிழ்கிறது.

இதை நீங்கள் புரிந்துகொண்டால் இனி விமானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

பொதுவாக காற்று இயக்க அறிவியல்(Aerodynamics) சோதனைகள் நீரில்தான் முதலில் சோதனை செய்யப்படுகிறது.ஏனெனில் நீர் மற்றும் வாயு ஆகிய இரண்டு பாய்மங்களும் கிட்டதட்ட ஒரே பண்புகளை கொண்டுள்ளது.

விமானம் எவ்வாறு பறக்கிறது -2  படிக்க க்ளிக் செய்யவும்


Facebook Comment Box

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...