December 25, 2013

சைன்ஸ் ஃபிக்ஸன் குறுங்கதை-2அன்டார்டிக் பிரதேசத்தில் இரு பிணந்தின்னி கழுகுகள் ஒரு போலார் கரடியின் இறந்த சடலத்தை கொத்தி தின்று கொண்டிருந்தன.

”அன்டார்டிக்காவில் கழுகுகள் இருப்பது சாத்தியமா?யாரிடம் கதை விடுகிறீர்கள்” என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் தயவு செய்து பின்தொடர்ந்து படிக்க வேண்டாம்.

அன்டார்டிக்கா என்று சொன்னதும்தான் நினைவுக்கு வருகிறது.நேற்று இரவு சவேரியாவில் சாப்பிட்ட சிக்கன் டிக்கா வழக்கமான சுவையில் இல்லாமல் சற்றே மாறுதலாய் இருந்தது.
காரணத்தை கேட்டதும் அதிர்ந்தே போய்விட்டேன்.வழக்கமாக பயன்படுத்தும் பெட்ரோலில் பொரிக்காமல் கடலெண்ணெய் விட்டு பொரித்திருக்கிறார்கள்.

எவ்வளவு பெரிய மோசடி பாருங்கள்.

...

இந்த கதையை தொடர்ந்து படிக்காதீர்கள் என்று கூறியும் தொடர்ந்து படித்துவிட்டு இதெல்லாம் ஒரு கதையா என்று காரி உமிழ்ந்தால் நீங்கள் மனிதர் எனக் கொள்க.

சொல்ல மறந்தது->என் பெயர்: DE229க0 இடம்: பேர்லல் யுனிவர்ஸ்.

December 24, 2013

சைன்ஸ் ஃபிக்ஸன் குறுங்கதை-110.45PM SaturDay

ப்ளூட்டோ கிரகத்தின் ஃபையர்பேஸ் நகரம் மதுவில் கரைந்து கொண்டிருந்தது.

அந்த பிரபல பதிவர் டைட்டானியம் ஹோட்டலின் ஏசி பாரில் வெஞ்சூனை சிப்பிக் கொண்டிருந்தார்.

”ட்ரிங்க்க்க்க்.....ட்ரிங்க்........ட்ரிங்க்க்க்க்க்........ட்ரிங்க்......”

’ஹலோ’

“யெஸ்,ஐ எம் பிரபல பதிவர் ஸ்பீக்கிங்”

...................

“ஒகே....தேங்க் யூ ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்”

பீப்.

www.facebook.com.

"pirapala pathivar" "************" Log In

”search ''aalga'”

"Poke Aalga"

”பேரர்,பில் ப்ளீஸ்””தேங்க் யூ”.

பிரபல பதிவரை கொல்ல பூமியில் இருந்து அனுப்பப்பட்ட ஆல்கா வைரஸ் வெஞ்சூனில் மிதந்து கொண்டிருந்தது.

10.00 PM SaturDay.

9/11 தாக்குதல்-மறைமுக பிணையக் கைதிகள்செப்டம்பர் 11,2001ல் நடைபெற்ற இரட்டைக்கோபுறத் தாக்குதல் சம்பவத்தில் 19 தீவிரவாதிகளுடன் சேர்ந்து மொத்தம் 2,996 பேர் இறந்துள்ளனர்.

ஆனால் இந்த நேரடி இறப்புத்தொகை போக மறைமுகமாக பல இறப்புகள் நடந்துள்ளன.

9/11 தாக்குதல் சம்பவத்திற்கு பின் பயம் காரணமாக நெடுந்தூரப் பயணங்களுக்கு மக்கள் விமானத்தை பயன்படுத்துவதை குறைத்தனர்(12-20% சதவீதம் குறைவு).அதனால் நீண்ட பயணங்களுக்கு சாலைப்போக்குவரத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர்
அவ்வாறு செய்த ஆபத்தான பயணங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 1,595 பேர் இறந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தீவிரவாதிகளின் மறைமுக பிணையக் கைதிகளாக அவர்களுக்கும் தெரியாமலேயே மாறியது சோகமான ஒன்று.

சீல் டீம் சிக்ஸ்

Seal Team Six


அமெரிக்காவின் சிறப்பு போர் மேம்பாட்டுக் குழுவின் ஒரு ரகசியப் பிரிவுதான் இந்த ”சீல் டீம் சிக்ஸ்”(SEAL-SEa,Air,Land).பல விதமான நெருக்கடி சூழ்நிலைகளை இந்த குழு சந்தித்திருந்தாலும் அவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை பிடித்தது மற்றும் சோமாலியாவில் 9 கடத்தல்காரர்களை கொன்றுவிட்டு இரு பணயக் கைதிகளை மீட்ட சம்பவங்கள்தான். 

சீல் டீம் சிக்ஸ் பின்லேடனை பிடிப்பதற்கு முன்பு பின்லேடன் தங்கியிருந்த ஒரு மாதிரி வீட்டை கட்டி நூறு முறைகளுக்கும் மேலான சாத்தியக்கூறுகளை(Probability) உருவாக்கி பயிற்சிகள் எடுத்துக்கொண்டனர்.பாகிஸ்தான் மற்றும் சோமாலியாவில் சீல் டீமின் சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகே அந்த நாட்டின் அரசுகளுக்கு தெரிய வந்திருக்கிறது.

சீல் டீமில் சேர்பவர்களுக்கு மிகக் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும்.தொடர்து மூன்று நாட்கள் ஓய்வின்றி கடுமையான பயிற்சி,கடும்குளிர் வீசும் கடல் நீரில் பல மணி நேரங்கள் இருத்தல்.அதிக பளுவை வெகுநேரம் தூக்கி வைத்திருப்பது என பல கடுமையான பயிற்சிகள் இருக்கும்.

சீல் டீமில் வேலை செய்பவர்கள் யார் யார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.அந்த குழுவில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு கூட அவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது தெரியாது.வருடத்தில் 300 நாட்களுக்கும் மேல் வீட்டிற்கே வராமல் இருக்கும் இவர்களில் 90%
சதவிகிதம் பேருக்கு சீக்கிரம் விவாகரத்து நிகழ்ந்து விடுகிறது.

சீல் டீம் என்ற பெயரே முன்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.அதற்கு முன் வேறு ஒரு போலி பெயரில் இவர்கள் செயல்பட்டு வந்தார்கள்.

தகவல் தொகுப்பு

>>டிவி கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் மக்கள் யாரும் பொறுமையாக அவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்க்க மாட்டார்கள்,எனவே டிவி தயாரிப்பு தோல்வியில் முடியும் என்று டைம்ஸ் இதழில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

>>குறைந்தபட்சம் உங்களைப் போல் தோற்றம் கொண்ட ஆறு பேர் இந்த உலகில் இருக்கலாம்.அவர்களை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்பு 9% சதவீதம் உள்ளது.

>>இந்தியாவில் IQ Level 120க்கு மேல் உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.இவர்கள் மொத்த அமெரிக்க மக்கள் தொகைக்குச் சமம்.

>>ஜாக்கி சான் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு நைட் க்ளப்பில் பவுண்சராக வேலை செய்து வந்தார்.ஒரு முறை அங்கு ஏற்பட்ட சண்டையில் ஜாக்கியின் உள்ளங்கை எலும்பு உடைந்து வெளியே தெரிந்து கொண்டிருந்தது.இரண்டு நாட்களாக அதை சரி செய்ய முயற்சித்த ஜாக்கிக்கு பின்புதான் தெரிந்தது அது வேறு ஒருவனுடைய பல் என்று.

>>மனிதனின் கண்கள் ஒரு டிஜிட்டல் கேமராவாக செயல்பட்டால் அதன் மெகாபிக்சல் 576.

>>அதிக நேரம் தண்ணீரிலேயே இருந்தால் கை மற்றுல் கால் பாதங்களில் உள்ள தோல்கள் சுருங்குவிடுவதை பார்த்திருப்பீர்கள்(அதிக நேரம் குளிக்கும்போது பாருங்கள்).

தண்ணீரில் அதிக நேரம் இருப்பதால் கை காலில் உள்ள தோல் ஊறிவிடுவது அல்லது சோப்பின் தன்மை என்பது தவறான காரணம்.

சரியான காரணம்: ஈரமான பொருட்களை கையாளும்போது ஒரு பிடிமானம் நமக்கு தேவைப்படுகிறது.உதாரணமாக ஒரு மழை நாளில் சாலையில் செல்லும் கார் டையர்களை கவனியுங்கள்.டயர் வழுவழுப்பானதாக இருந்தால் கார் வழுக்கி கீழே விழ வாய்ப்புள்ளது.
அதுபோல நமது மூளையின் செயல்பாடு காரணமாக ஏற்படும் அனிச்சை செயலால் நீரில் இருக்கும்போது பிடிமானத்திற்காக தோலில் சுருக்கம் ஏற்படுகிறது.

>>செல்போன்களில் உங்களுடைய குரலை பதிவு செய்து கேட்டால் உங்களுக்கே அது பிடிக்காமல் போவதையும் சற்று வித்தியாசமாக இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

அதற்கு காரணம் நாம் சாதரணமாக பேசும்போது நமது குரல் ஒலி முழுவதும் காற்றின் வழியில் காதுகளை அடையாமல் சிறிதளவு ஒலி நம் தலையில் உள்ள எலும்புகளில் ஏற்படும் அதிர்வுகள் மூலம் கடத்தப்படுகிறது.

உங்களுடைய உண்மையான குரல் என்பது நீங்கள் செல்போனில் பதிவு செய்து கேட்கும் குரல்தான்.மற்றவர்களுக்கும் அது அப்படித்தான் கேட்கும்.


-கவின்

September 10, 2013

விமானம் எவ்வாறு பறக்கிறது -2

விமானம் எவ்வாறு பறக்கிறது -1 படிக்க க்ளிக் செய்யவும்.                              

                                      சிறுவயதில் நமக்கு விமானத்தின் செயல்பாடு பற்றி சரியான புரிதல் இருக்காது.விமானத்தின் முன்னே உள்ள ப்ரொப்பலர் சுற்றுவதால் விமானம் பறக்கிறது என நாம் நினைத்துக்கொண்டிருப்போம்.அதுவும் ஓரளவு சரியானதுதான் என்றாலும் முழு செயல்பாட்டையும் அறிந்து இருக்க மாட்டோம்.

விமானத்தை விமானி ஓட்ட ஆரம்பித்தவுடன் விமானம் அதன் ஓடுபாதையில் இருந்து நேராக சென்று மேலெழும்புகிறது.இதற்கு காரணம் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள விமானத்தின் சிறப்பான ஒரு றெக்கை வடிவமைப்பு ஆகும்.ஒரு விமானத்தின் றெக்கை சற்று வளைவான வடிவமைப்பில்(Concave Downward Shape) அமைந்திருக்கும்.

விமானம் முன்னோக்கி நகரும்போது   வளிமண்டல காற்று  றெக்கைளின் மேல் மோதுகிறது.அவ்வாறு மோதும் காற்றில்  அதிவேக காற்று றெக்கையின் மேல்புறமும் வேகம் குறைந்த காற்று றெக்கையின் அடிப்புறமும் மோதுவதுபோல விமானத்தின் றெக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இப்பொழுது முந்தைய பதிவில் சொன்ன பெர்னோலி கோட்பாட்டை சற்று ஞாபகப் படுத்திப் பார்ப்போம்.

அதாவது ”பாய்மத்தின்(காற்று) வேகம் அதிகரிக்க சம அளவில் அழுத்தம் குறைகிறது”.

அப்படியெனில் அதிவேக காற்று றெக்கையின் மேற்புறம் செயல்படுவதால்  றெக்கையின் மேற்புறம் அழுத்தம் குறைகிறது.றெக்கையின் கீழ்புறம் பெரிய ப்ரொப்பலர்கள் கீழே படத்தில் உள்ளது போல அமைக்கப்பட்டு காற்றை

விமானம் எவ்வாறு பறக்கிறது -1

                                 
                                          1903ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ரைட் சகோதரர்களான ஆர்வில் ரைட் மற்றும் வில்பர்ட் ரைட் இருவரும் இன்றைய விமானங்களுக்கு முன்னோடியாக 36மீட்டர்கள் தூரம் 62 வினாடிகள் வானில் பறந்து சாதனை படைத்தனர்.

இவர்கள் கண்டுபிடித்த அந்த விமானம் தொழில்நுட்ப ரீதியில் சிறந்து விளங்கியது.அறிவியல் வளர வளர விமான தொழில்நுட்பமும் வளர்ந்து இன்று மனிதர்களுக்கு பயனுள்ள வகையில் அதிக வசதிகள் கொண்ட விமானங்கள் வானில் உலா வருகின்றன.

சரி.இனி விமானத்தின் செயல்பாடுகளைப் பற்றி பார்ப்போம்.அதிக எடை கொண்ட விமானம் எவ்வாறு காற்றில் அனாசயமாக பறந்து செல்கிறது? இதை தெரிந்து கொள்வதற்கு முன் சில இயற்பியல் கோட்பாடுகளைப் பற்றி பார்த்து விடுவோம்.

July 3, 2013

ஹாலிவுட் மக்களுக்கு சொல்வது என்ன?


1.சீனர்கள் குங்-ஃபூ சண்டை போடுவதை தவிற வேற ஒன்றும் தெரியாதவர்கள்.

2.அமெரிக்கர்களில் 50% பேர் FBI மற்றும் CIA’வின் ஏஜெண்டுகளாக பணிபுரிபவர்கள்.இவர்கள் அனைவருக்கும் எப்பொழுதும் ஒரு UnderCover Operation இருந்துகொண்டே இருக்கும்.

3.அமெரிக்காவில் பள்ளிகள் இருப்பது Baseball மற்றும் Basket Ball விளையாடுவதற்காக மட்டுமே.

June 3, 2013

கரூர் ஸ்பெஷல் ’கரம்’கரம் என்ற சிற்றுண்டி மாலை வேளையில் கரூரில் அநேக இடங்களில் தள்ளு வண்டி கடைகளில் கிடைக்கும் ஒரு காரமாண உணவுப்பொருள்.

ஒரு கப் பொரியுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் சட்னி(காரம் அதிகமாக),கார சட்னி,மல்லி சட்னி,சிறிதளவு பீட்ருட் துருவல், முறுக்கு,மிச்சர் சேர்ந்த கலவையே கரம் எனப்படும்,

இது மிகவும் காரமாகவும் சுவை மிகுந்ததாகவும் உள்ள உணவுப்பொருள்.நாள் முழுவதும் உழைத்து களைத்து பசியுடன் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் வாங்கி சாப்பிடும் சுகமே தனி.

May 17, 2013

மனிதனை தின்ற நாய்கள்

2011 ஆகஸ்ட் மாதம் ஆண்ட்ரி லம்பொசா என்ற இந்தோனேஷியர் தனது விடுமுறையை கொண்டாட இரண்டு வாரங்களுக்கு வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுகிறார்.
லம்பொசா  அவர் வீட்டில் ஒன்பது நாய்களை வளர்த்து வருகிறார்.விடுமுறையை கொண்டாட அவர் வெளியூர் செல்லும்போது அவர் வளர்க்கும் நாய்களுக்கு எந்த வித உணவு,தண்ணீர் முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை.
முதல் சிறிது நாட்களுக்கு அந்த ஒன்பது நாய்களில் உள்ள இரண்டு பலவீனமான சிறிய நாய்களை மற்ற ஏழு நாய்களும் கொன்று தமக்கு உணவாக்கி கொண்டுள்ளதாக தெரிகிறது.
ஆகஸ்ட் 31ந் தேதி லம்பொசா வீடு திரும்புகிறார்,
தனது உடைமைகளை வீட்டின் வாசலிலேயே வைத்துவிட்டு,இரண்டு

May 14, 2013

ஆப்ரகாம் லிங்கன் Vs ஜான் எஃப் கென்னடி

அமெரிக்காவின் 16'ஆவது ஜனாதிபதி 'ஆப்ரகாம் லிங்கன்' மற்றும் 35’வது ஜனாதிபதியாக பதவி வகித்த ’ஜான் எஃப் கென்னடி’ இருவருடைய வாழ்க்கையிலும் நிறைய விஷயங்களிடையே நம்ப முடியாத பல ஒற்றுமைகள் இருந்துள்ளன.

லிங்கன் - கென்னடி
  • ஆப்ரகாம் லிங்கன் காங்கிரஸ்  சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1846
  •  ஜான் எஃப் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டது சரியாக நூறு வருடம் கழித்து 1946
  •  ஆப்ரகாம் லிங்கன் துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1856
  • ஜான் எஃப் கென்னடி துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது, சரியாக நூறு வருடம் கழித்து  1956.
  • ஆப்ரகாம் லிங்கன் ஜனாதிபதியாக பதவி ஏற்றது 1860ல்,

May 13, 2013

ஹிட்லர் கொல்லப்பட்டது உண்மையா?? (எழுதியவர் - திரு.ராஜ் சிவா)

ஒருவர் நம்மை ஏமாற்றினால் நமக்கு எவ்வளவு கோபம் வந்துவிடுகிறது. அப்படி ஏமாற்றுபவர் பல நாட்களாக நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தால் கொலை வெறியே வந்துவிடும். அவரே பல ஆண்டுகள் ஏமாற்றினால் எப்படி இருக்கும்? ஆம்! வரலாற்றில் ஒருவன் 66 ஆண்டு காலமாக நம்மை ஏமாற்றியிருக்கிறான். நம்மை என்றால் நம் இனத்தை மட்டும் அல்ல, நம் நாட்டை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த உலகையே 66 ஆண்டுகளாக ஏமாற்றியிருக்கிறான். அவன் ஏதோ ஒரு  சின்ன விடயத்தை வைத்து நம்மை ஏமாற்றி விடவில்லை. தான் ‘உயிருடன் இல்லை’ என்று உலகையே நம்ப வைத்து ஏமாற்றியிருக் கிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள்  உயிருடனும் வாழ்ந்திருக்கிறான். அவன் ஒரு சாதாரன மனிதன் என்றால், நாம் அவனைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. சரி, அவன் ஒரு நாட்டின் தலைவன், பிரபலமானவன் என்ற மட்டிலும் இருந்திருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், 20ம் நூற்றாண்டிலேயே மிகவும் கொடூரமானவன் எனக் கணிக்கப்பட்டவன் அவன். கொல்லப்பட வேண்டியவன் என்று அஹிம்சையில் நம்பிக்கை உள்ளவர்களால் கூட நினைக்கப்பட்டவன் அவன்.

 

கடந்து வந்த வரலாற்றுத் தடங்களில், விடை சொல்ல முடியாத பல மர்மங்கள், கருப்புத் தீவுகளாக இப்போதும் நம்மிடையே படிந்து காணப்படுகின்றன. விடை தேடி, விடைகள் கிடைக்கப்படாமல் மர்மங்களாகவே அவை தம்மை ஒரு கூட்டுக்குள் பூட்டி வைத்துக் கொள்கின்றன. எந்த ஒரு கேள்விக்கும் மிகச் சரியாக, ஒரே ஒரு விடைதான் இருக்க முடியும். அது போல எந்த ஒரு மர்மத்துக்கும் தீர்வாக இருப்பதும் ஒரே ஒரு விடைதான். ஆனால் சரியான விடை தெரியாத பட்சத்தில், பல விடைகளை அந்த மர்மத்தின் தீர்வாக நாமே பொருத்திப் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி வரலாற்றில் உண்மை என்பது, எங்கோ ஒரு மூலையில் நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டே இருக்கின்றது.  

உலகத் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரின் மரணங்கள், இந்த வரலாற்று மர்மத்தின் பக்கங்களாக நிரப்பப்பட்டு இருக்கின்றது. இவர்களின் பெயர்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் குறிப்பாகச் சொல்லப்படும்

May 12, 2013

உண்மை என்பது உண்மையா? (எழுதியவர்-திரு.ராஜ் சிவா)


                                                                             திரு. Raj Siva அவர்கள் எழுதிய “உண்மை என்பது உண்மையா?” என்ற கட்டுரை பதிப்பின் பிரதி உங்களுக்காக.

                                                            அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை இது!


“உண்மை என்றால் என்ன?” இந்தக் கேள்வியை எப்பொழுதாவது சிந்தித்து இருக்கிறீர்களா...?

நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். உங்களைக் கண்ணாடியிலோ, படத்திலோ நீங்கள் நிச்சயம் பார்த்திருக்கிறீர்கள். உங்கள் உருவம் எப்படி இருக்கும் என்று நிச்சயம் உங்களுக்குத் தெரியும். இப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கும் உங்கள் முகம், அப்படித்தான் இருக்கிறது என்று உங்களால் அடித்துச் சொல்ல முடியுமா? நிச்சயமாக நூறு சதவீதம் அப்படி இருக்கச் சாத்தியமே இல்லை. “இது என்ன அபத்தம்? என் முகத்தைக் கூடவா உண்மையில்லை என்று சொல்கிறீர்கள்?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது அபத்தம் இல்லை. கண்ணாடியில் உங்கள் முகத்தை நீங்கள் பார்க்கும்போது, அது உங்கள் முகத்தை இடம் வலம் மாற்றியே காண்பிக்கிறது. நீங்கள் கண்ணாடியில் பார்க்கும்போது, முகத்தின் வலது கண், உங்கள் இடது கண்ணாக இருக்கும். நீங்கள் வலது கையை உயர்த்தும்போது, கண்ணாடியில் தெரியும் உங்கள் உருவத்தில் இடது கை உயர்த்தப்படும். எனவே கண்ணாடியில் பார்க்கும் உங்கள் முகத்தை உங்கள் உண்மையான முகம் என்று நினைப்பதே தவறு. இதுதான் உங்கள் முகம் என்று ஒரு குத்துமதிப்பான தோற்றத்தை மூளை உங்களுக்குள் பதிந்து வைத்திருக்கிறது. இப்போது நீங்கள், “மற்றவர்களுக்கு என் முகம் தெரிகிறதுதானே, மற்றவர்களுக்குத் தெரியும் முகம்தான் என் முகம். அவர்கள் பார்க்கும் என் முகம் உண்மைதானே! நான், என் அம்மாவின் முகத்தை என் இரண்டு கண்களாலும் பார்க்கிறேன். அப்படியென்றால் என் அம்மாவின் முகம் உண்மையானதுதானே!” என்று கேட்கலாம். துரதிர்ஷ்டவசமாக அதுவும் உண்மையில்லை. இது புரிய வேண்டும் என்றால், நாம் ஒரு பொருளை எப்படிப் பார்க்கிறோம் என்று தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு பொருளில் இருந்து வரும் ஒளி, நமது கண்ணில் உள்ள வில்லையினூடாகச் சென்று விழித்திரையில் விம்பமாக விழுகின்றது. எப்படி விழுகிறது தெரியுமா? மிகச் சிறியதாகவும், தலைகீழாகவும் விழுகிறது. விழித்திரையில் விழுந்த விம்பம் பார்வை நரம்புகளினூடாக மூளைக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் நமது மூளைதான், அந்த தலைகீழ் விம்பத்தை நிமிர்த்தி, அளவுப் பரிமாணங்களைக் கொடுத்து, நாம் பார்த்த பொருள் இதுதான் என்று நமக்கு அறிவிக்கிறது. இந்த இடத்தில் கண்வில்லை, விழித்திரை, பார்வை நரம்புகள், மூளை என்னும் பல விதமான உடலுறுப்புகள் தமது கடமைக்கான பொறுப்புகளை எடுக்கின்றன. ஆனால் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த உறுப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. ஒவ்வொருவரின் கண்வில்லைகளும் தனித்தனியான திறன் (Power) கொண்டவை. ஒவ்வொருவரும் தனியான நிறக்குருடு கொண்டவர்கள். மூளையின் திறனும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டவையாகவே இருக்கும். ஆகையால், ஒருவர் பார்க்கும் அதே உருவத்தை மற்றவர் பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் பார்க்கும் வடிவம் அடுத்தவர் பார்ப்பது போல இருக்காது. ஆனால் நாம் ஒரே உருவத்தைத்தான் பார்க்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறோம்.

ஒருவர் கண்ணுக்குத் தெரியும் சிவப்பு நிறத்துக்கும், இன்னுமொருவர் கண்ணுக்குத் தெரியும் சிவப்பு நிறத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சிவப்பு நிறம், வெள்ளை நிறத்துடன் சேர்ந்து, கடும் சிவப்பிலிருந்து மெல்லிய சிவப்பு வரை, மொத்தமாக 255 விதமான சிவப்பு நிறங்களைக் கொடுக்கும். நன்றாக உற்றுப் பார்த்தால் அதில் ஒரு சிவப்பு இன்னுமொரு சிவப்பாக இருக்காது. கணினி பாவிப்பவர்கள் போட்டோ ஷாப்பில் இந்த நிறங்களைக் காணலாம். சொல்லப் போனால், 255 விதங்கள் மட்டுமல்ல, அதற்கும் அதிகமான சிவப்பு நிறங்கள் உண்டு என்றாலும், நாம் 255 என்பதிலேயே நின்று கொள்ளலாம். இந்தச் சிவப்பு நிறங்கள் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த வேறுபாடுகளுடனே தெரிகிறது. சிவப்பு நிறம் போலவே மற்ற வர்ணங்களும் பல படிகளையுடையவை. இதனால் பார்க்கப்படும் பொருளின் வர்ணங்கள் கூட ஆளாளுக்கு வேறுபடுகிறது. ஒவ்வொருவரும் வேறு வேறானதைப் பார்க்கும்போது, யார் பார்ப்பது உண்மையாகிறது?

இது போல, ஒருவர் கேட்கும் ஒலி, நுகரும் வாசனை, உணரும் ருசி எல்லாமே அடுத்தவர்களுடன் ஒப்பிடும்போது வேறு வேறானது. ஒரே அல்வாவை, இரண்டு துண்டுகளாக்கி நானும், நீங்களும் உண்டால், நான் உணரும் இனிப்புச் சுவையை நீங்கள் உணரப் போவதில்லை. அப்படியென்றால் அந்த அல்வாவின் உண்மையான ருசி எது? என்னுடையதா? உங்களுடையதா? கண் பார்வை, நிறக்குருடு, வாசனை இல்லாமை, கேளாமை, நாக்கின் தன்மை ஆகிய குறைபாடுகள் நமக்கு முழுமையாக இல்லாவிட்டாலும், சில வீதங்களில் சிறிதளவேனும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அந்தக் குறைபாடுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறு வேறானது. எவருக்குமே ஒன்று போல இருப்பதில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, மூளையின் கணிப்புத் தன்மை. அது எப்போதும் ஒன்று போல இருக்காது. இவையெல்லாவற்றினாலும் உணர்வதில், யார் உணர்வது உண்மை? அவர் உணர்வதா அல்லது இவர் உணர்வதா அல்லது இருவருமே இல்லையா?

ஒரு நீல நிறப் பொருள் நம் கண் முன்னே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பொருளை நீல நிறப் பொருள் என்கிறோம். உண்மையில் அந்தப் பொருள் நீல நிறமானதுதானா? அறிவியலின்படி பார்த்தால், சூரிய ஒளி அந்தப் பொருளில் படும்போது, அது சூரிய ஒளியில் உள்ள அனைத்து நிறங்களையும் உள்ளே உறிஞ்சிவிட்டு, நீல நிறத்தை மட்டும் வெளியே தெறிக்கவிடுகிறது. அதனால் அந்தப் பொருளை நீல நிறம் என்கிறோம். ஆனால் உண்மையில் அந்தப் பொருள் நீலமா? இல்லை. அது நீல நிறத்தை தெறிக்க விடுகிறது அவ்வளவுதான். இந்த வாதத்தில் உங்களுக்குச் சம்மதம் இல்லாமல் இருக்கலாம். வானம் நீல நிறம் என்கிறோம். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? பூமியின் காற்றுவெளி மண்டலத்தினூடாக சூரிய ஒளியின் எல்லா நிறமும் ஊடுருவி வர, நீல நிறம் மட்டும் அங்கே சிதறுகிறது. அதனால் வானம் நீலமாகத் தெரிகிறது. ஆனால், மேலே சென்றால் அங்கே வானம் நீலமாக இருக்காது. ஒளியில்லாத வானம் கருமையாகவே காட்சியளிக்கிறது.

உண்மை என்பதை இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு வரையறுத்து விட முடியாது. அவை தாண்டிய பல உண்மைகளும் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இந்தக் கூற்று புரிகிறதா என்று பாருங்கள்.

“நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டு, இறந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”

‘அது எப்படி நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டு, இறந்தகாலத்தை நாம் பார்க்க முடியும்?’ என்றுதானே நினைக்கிறீர்கள்? இந்தக் கணத்தில் நாம் பார்க்கும் எதுவுமே இந்தக் கணத்தின் உண்மையல்ல. அது கடந்த காலத்தின் உண்மை. நம் அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் அனைத்துமே இறந்த காலத்துக்குரியவை. என்ன புரியவில்லையா? பரவாயில்லை, இதைப் பாருங்கள்.

ஒளி ஒரு பொருளில் பட்டுத் தெறிப்பதனாலேயே நாம் அந்தப் பொருளைப் பார்க்கிறோம். ஒளிக்கு என ஒரு வேகம் உண்டு. ஒரு செக்கனுக்கு 300000 கிலோ மீற்றர்கள் தூரத்துக்கு ஒளி செல்லும். இந்த வேகத்தை நாம் சாதாரணமாகக் கற்பனையே பண்ண முடியாது. பூமியிலிருந்து சூரியன் 149.6 மில்லியன் கிலோ மீற்றர்கள் தூரத்தில் இருக்கிறது. அதனால், சூரியனில் இருந்து வரும் ஒளி, பூமியை வந்து அடைய 8.3 நிமிடங்கள் எடுக்கிறது. அதாவது நாம் தற்சமயம் சூரியனைப் பார்த்தால், உண்மையில் அது இந்தக் கணத்தில் உள்ள சூரியன் இல்லை. 8.3 நிமிடத்துக்கு முந்தியது. ஒரு பேச்சுக்கு, சூரியன் வெடித்துச் சிதறியது என்று எடுத்தால், 8.3 நிமிடங்களுக்குப் பின்னர்தான் நமக்குத் தெரிய வரும். எட்டு நிமிடம் வரை வெளிச்சம். அப்புறமே இருள்.

இப்போது நட்சத்திரங்களைப் பற்றிச் சற்று யோசியுங்கள்! அவை மிக மிக அதிகத் தூரத்தில் உள்ளன. நமக்கு அண்மையில் இருக்கும் நட்சத்திரம், நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தது 20 ஒளியாண்டுகள் தூரத்திலும், அப்புறம் ஐம்பது ஒளியாண்டுகள். இப்படியே மில்லியன் ஒளியாண்டுகள் தூரங்களில் எல்லாம் நட்சத்திரங்கள் உண்டு. நமக்கு அண்மையில் இருக்கும் நட்சத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் பார்க்கும் அந்த நட்சத்திரம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நட்சத்திரம். காரணம், அந்த நட்சத்திரம் நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதால், அதிலிருந்து வரும் ஒளி நம்மை வந்து அடைய எடுக்கும் காலம் நான்கு ஆண்டுகள். அது வெடித்துச் சிதறினால், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நமக்குத் தெரிய வரும். அதுவரை அந்த நட்சத்திரம் இருக்கிறது என்றே நாம் நம்புவோம். நாம் கண்களால் பார்க்கும் எல்லா நட்சத்திரங்களும் (ஒன்றிரண்டைத் தவிர) நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ளவை. அவை வெடித்தாலும் நமது வாழ்நாளில் அது வெடித்தது என்றே தெரியப் போவதில்லை. காரணம், அது தெரிய நூறு ஆண்டுகள் தேவை. இப்போது சொல்லுங்கள், வானத்தில் நாம் காணும் அனைத்துமே இந்தக் கணத்தின் உண்மையல்ல அல்லவா? அவை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை. ஆனால் இந்தக் கணத்தில் அவை இருப்பதாக நாம் நம்புகிறோம். அதாவது நாம் நிகழ்காலத்தில் இருந்து கொண்டு, இறந்த காலத்தைப் பார்க்கிறோம். சற்று தொடர்ந்து சிந்தித்துப் பார்த்தால், உங்கள் நண்பன் ஒரு மீற்றர் தூரத்தில் நின்றாலும், அவரின் இறந்த காலத்துத் தோற்றத்தைத்தான் நீங்கள் பார்ப்பீர்கள். நட்சத்திரங்கள் போல ஆண்டுக் கணக்கு இல்லாமல், 3.336 நானோ செக்கன்கள் முன்னர் உள்ள நண்பராக இருப்பார்.

இந்த விசயம் சம்பந்தமான ஒரு விந்தையான தகவலையும் சொல்கிறேன்.........!

பூமியில் இருந்து 2012 ஒளியாண்டுகள் தூரத்தில், பூமி போன்ற ஒரு கோள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிபுத்திசாலிகளான ஏலியன்கள் அங்கு வாழ்கின்றன என்றும் வைத்துக் கொள்ளுங்கள். நம்மை விட அறிவியலில் அதிக வளர்ச்சி கண்டவர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஏலியன்கள் நமது பூமியைப் பார்க்கும்படியான ஒரு அதிநவீனத் தொலைநோக்கியை (Telescope) வைத்திருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். சும்மா ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தொலைநோக்கியால் அவர்கள் பூமியைப் பார்த்தால், பூமியில் இயேசுநாதர் நடமாடிக் கொண்டிருப்பது தெரியும். புரிகிறதா.....? புரியாவிட்டால் பரவாயில்லை, விட்டுவிடுங்கள்.

நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் கலங்களால் (Cells) ஆனவை. உடலில் உள்ள பெரும்பாலான கலங்கள் உயிர் வாழ்வது சில நாட்களே! தினமும் நம்முடலில் பல கோடிக் கலங்கள் அழிகின்றன, பல கோடிக் கலங்கள் மீண்டும் புதிதாக உருவாகின்றன. நமது உடலின் ஏதாவது ஒரு உறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.

சரி, உதாரணமாக உங்கள் கட்டை விரலை எடுத்துக் கொள்ளுங்கள். நேற்று நீங்கள் பார்த்த கட்டை விரல், இன்று இருக்காது. அந்தக் கட்டை விரலில் தினம் கோடிக்கணக்கான கலங்கள் இறந்து, கோடிக்கணக்கான கலங்கள் புதிதாக உருவாகின்றன. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு கணமும் நடைபெறுகின்றன. அப்படியாயின், நீங்கள் ஒருதரம் பார்க்கும் கட்டை விரல் பின்னர் பார்க்கும் கட்டை விரல். அதனால் ஒருநாளில் பார்ப்பதும், அடுத்த நாளில் பார்ப்பதும் வேறு வேறு. ஒரு உறுப்பே இப்படி மாறுகிறது என்றால், உங்கள் மொத்த உடலைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இன்று இருக்கும் நீங்கள், நாளை இருக்கும் நீங்கள் கிடையாது. ஆனால் நாம் ஒரே ஆள் என்றே நம்புகிறோம். இதை நீங்கள் ஏற்க மறுக்கலாம். ஆகையால் இப்படிப் பாருங்கள். மூன்று வயதில் இருந்த நீங்கள், இப்போது இருக்கும் நீங்கள் கிடையாது. இந்த மாற்றம் ஒரேயடியாக நடைபெற்ற மாற்றம் கிடையாது. தினம் தினம் ஏற்பட்ட மாற்றங்களின் ஒரு தொகுப்பு.

நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும் மனதில் வைத்துச் சிறிது சிந்தித்துப் பார்த்தோமானால், நாம் நினைக்கும் எதுவுமே உண்மை இல்லை என்பது புரியவரும். ஆனால் அவற்றையே உண்மை என்று நம்பி வருகிறோம் 

January 10, 2013

சிம்பன்ஸி குரங்குகள்-சில உண்மைகள்


   
உலகில் உள்ள விலங்குகளில் சிந்த்திக்கும் திறனில் மிகச்சிறந்தவையாக இரண்டு விலங்குகள் உள்ளது.
முதலாவதாக மனிதன் இரண்டாவதாக சிம்பன்ஸிக்கள்.

குரங்குகளில் சிம்பன்ஸிக்கள் மனித இனத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது. இவை ஆப்பிரிக்காவில் மேற்குப் பகுதிகளில் காணப்படுகிறது.

சின்பன்ஸிகள் அன்பு மற்றும் பாசத்துக்குக் கட்டுப்பட்டவை. அன்பானவர்களை பிரிந்தால் மனிதர்கள் மிகவும் வருந்துவார்கள். இந்த உணர்வுக்கு சிம்பன்ஸிகளும் சளைத்தவை கிடையாது.

சிம்பன்ஸிக்களின் அறிவுத்திறனுக்கு உதாரணமாக,ஒரு விதையினை ஒரு கல்லை கொண்டு சரியான அளவு அழுத்தம் கொடுத்து விதையில் உள்ள பருப்பு உடையாமல் ஓட்டை மட்டும் சரியாக உடைப்பது,எறும்பு புற்றில் ஒரு நீண்ட குச்சியினை வைத்து, அதில் எறுப்ம்புகள் ஏறியவுடன் அப்படியே உண்பது போன்றவை.

வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் சிம்பன்ஸிக்கள் டிவி சேனலை மாற்றுவது, ஓவியம் வரைவது,என இன்னும் பலவற்றை சொல்லலாம்.இவ்வளவு அறிவுள்ள சிம்பன்ஸிக்கள் இதே அளவு ஆபத்தும் உள்ளது.
சிம்பன்ஸிக்கள் மனிதர்களைப்போலவே நாம் அவர்கள் என்று அணி அணியாக வாழ்பவை.

எதிரணியில் உள்ள குரங்குகளை தாக்க செல்லும்போது இவை சத்தமின்றி ராணுவத்தைப்போல வரிசைகட்டி செல்வது ஆச்சரியமான ஒன்று.

எதிரணியில் உள்ள ஒரு சிம்பன்ஸி இவைகளிடம் சிக்கினால் அவ்வளவுதான்,,மிகக்கொடூரமாக தாக்கி கை கால் மற்றும் விறைகளை பிய்த்து கொடூரமாக கொலை செய்யும்
.

இதற்கு காரணம் இவற்றிற்கு இந்த கொல்லும் விளையாட்டில் கிடைக்கும் மனமகிழ்ச்சியே காரணம்
.
                                                    
செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் சிம்பன்ஸிக்கள் சில நேரம் வளர்ப்பாளரையே கொடூரமாக தாக்கிய சம்பவங்களும் உண்டு.எனவே இந்த கொடூர செல்லப்பிராணியை வளர்க்க தனி தைரியம் வேண்டும்.


பொதுவாக செல்லபிராணிகள்,குரங்குகள்,போன்றவை மனிதர்களை தாக்குவதற்கு காரணம்,அவை சிறுவயதில் அதன் சூழல் மற்றும் குடும்பத்தில் இருந்து பிரித்துவரப்பட்ட நினைவுகளால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணாமக அமைகிறது.

இந்திய யானைகளில் இது அதிகமாகவே காணப்படுவது உண்மை.

மாறிவரும் மாணவர் கல்வி


தமிழநாட்டில் இன்று எல்லா பள்ளிகளிலும் பின்பற்றிக்கொண்டிருக்கும் கல்வி முறை மாணவர்களின் கற்றல்,ஆராய்தல்,அறிதல் திறனை மேம்படுத்துகிறதா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

பெரும்பாலான பள்ளிகளில் ’ப்ராஜெக்ட்’ என்கிற பெயரில் மாணவர்களின் ’சுய சிந்தனை’ திறன் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் முடக்கப்பட்டு வருகிறது.!

கல்வியியல் கல்லூரி மாணவர்கள் செய்யக்கூடியது போன்ற ப்ராஜெக்டுகளை பள்ளி மாணவர்களிடம் கொடுத்து செய்யச்சொல்வதால் அவர்களின் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு அதை செய்து கொடுத்து தங்கள் அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள்.

ஆசிரியர்கள் ஏதாவது ஒரு தலைப்பை கொடுத்து ஒரு கட்டுரை எழுதிக்கொண்டு வரச்சொல்லும்பொழுது கூடவே, இணையதளத்தில் பார்த்து எழுதிட்டு வரச்சொல்கிறார்கள்.

பக்கத்து வீட்டில் ஒரு பையன் எட்டாம் வகுப்பு படிக்கிறான்.அவனுடைய ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதச்சொல்லி ’பொங்கல் பண்டிகை’ எனத் தலைப்பையும் கொடுத்துவிட்டிருந்தார்.
கூடவே அவர் இணையத்தை பார்த்து எழுதி வரச்சொல்லியிருக்கிறார்!

இது ஒரு சிறிய உதாரணமே.

இந்த தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றால் ஒரு நிமிடம் உட்கார்ந்து சிந்தித்தாலே போதும், அந்த மாணவ்ர்கள் எழுத முடியும்.

தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடி வரும் பொங்கல் பண்டிகையை கூட இணையதளத்தில் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு மாணவர்கள் மாறி வருகிறார்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள்!!

~இதில் எங்கிருந்து ஒரு மாணவனின் சுயசிந்தனை பிற்காலத்தில் வெளிப்பட்டு அவனை தனித்துக்காட்டும்.??

உலக அளவில் மேலும் நம்மவர்கள் அடுத்தவரிடம் கைகட்டி நின்று சம்பளம் வாங்கும் நிலை தொடருமே தவிர, இந்தியாவில் இருந்து ஒரு பில்கேட்ஸ் கூட இனிமேல் உருவாக முடியாத சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது.!

January 7, 2013

டீன் மெச்சூரிட்டியும் சமூக குற்றங்களும்-ஒரு பார்வை

இன்றைய சூழலில் 12 வயதில் உள்ள ஒரு டீன் ஏஜ் சிறுவன்/சிறுமி பெரியவர்களுக்கே உரிய மெச்சூரிட்டியை கொண்டுள்ளார்கள்.
அவ்வாறு அவர்கள் கொண்டுள்ள இந்த குணங்களால் அவர்களுக்கு நன்மைதானா என்றால் நிச்சயமாக இல்லை!

அந்த மெச்சூரிட்டி மைண்ட்’டை அவர்களால் கையாள இயலாதபோதுதான் பாலியல்,திருட்டு,கொலை போன்ற குற்றங்கள் நடைபெறுகிறது காரணம்!

நீங்கள் ஒன்றை கவனித்திருக்கலாம், இந்த நூற்றாண்டில் பிறந்த குழந்தைகள் அதன் 2 அல்லது 3 வயதை எட்டுபோது அது ஒரு பெரிய மனிதனை போல் பேசுவதும்,கோபம் வந்தால் பொருள்களை தூக்கி உடைப்பதும்,
வீட்டை விட்டு வெளியேறுவதும் பொதுவாக பார்க்க வேண்டிய விஷயமில்லை! பெற்றோர்கள் இதைப்பார்த்து சந்தோஷப்படுவதுதான் உச்சகட்ட கொடுமை!

அந்த குழந்தை வளர வளர அதன் மனதில் இந்த உணர்சிகள் ஒரு அனிச்சை செயல்போல பதிவாகி அக்குழந்தை வளர்ந்ததும் அதே போல் நடந்து கொள்கிறது!

டீன் ஏஜ்’ஜில் என்னதான் மெச்சூர் ஆக இருந்தாலும் அதை சரியான பாதையில் வழிநடத்த தவறுவது சமூக குற்றங்களில் மாணவர்களை ஈடுபட வைக்கிறது.

சிறுவர் குற்றங்களில் பெரும்பாலும் மாணவர்களின் பெயர் அடிபடுவது நம் கல்வி முறையின் கையாலாகாத்தனமாகவே தோன்றுகிறது.!

சட்டங்கள் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் இந்த அடிப்படை விஷயங்களை கவனித்து நடவடிக்கை எடுக்காமல் போனால் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை!

கோபத்தில் கொலை செய்த பின் தண்டனை வாங்கி தருவது ஒன்றும் சிறப்பு அல்ல.!
கோபமே வராமல் தடுக்க என்ன வழியோ அதை செய்வதே சிறந்தது!


Related Posts Plugin for WordPress, Blogger...