December 25, 2013

சைன்ஸ் ஃபிக்ஸன் குறுங்கதை-2அன்டார்டிக் பிரதேசத்தில் இரு பிணந்தின்னி கழுகுகள் ஒரு போலார் கரடியின் இறந்த சடலத்தை கொத்தி தின்று கொண்டிருந்தன.

”அன்டார்டிக்காவில் கழுகுகள் இருப்பது சாத்தியமா?யாரிடம் கதை விடுகிறீர்கள்” என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் தயவு செய்து பின்தொடர்ந்து படிக்க வேண்டாம்.

அன்டார்டிக்கா என்று சொன்னதும்தான் நினைவுக்கு வருகிறது.நேற்று இரவு சவேரியாவில் சாப்பிட்ட சிக்கன் டிக்கா வழக்கமான சுவையில் இல்லாமல் சற்றே மாறுதலாய் இருந்தது.
காரணத்தை கேட்டதும் அதிர்ந்தே போய்விட்டேன்.வழக்கமாக பயன்படுத்தும் பெட்ரோலில் பொரிக்காமல் கடலெண்ணெய் விட்டு பொரித்திருக்கிறார்கள்.

எவ்வளவு பெரிய மோசடி பாருங்கள்.

...

இந்த கதையை தொடர்ந்து படிக்காதீர்கள் என்று கூறியும் தொடர்ந்து படித்துவிட்டு இதெல்லாம் ஒரு கதையா என்று காரி உமிழ்ந்தால் நீங்கள் மனிதர் எனக் கொள்க.

சொல்ல மறந்தது->என் பெயர்: DE229க0 இடம்: பேர்லல் யுனிவர்ஸ்.

December 24, 2013

சைன்ஸ் ஃபிக்ஸன் குறுங்கதை-110.45PM SaturDay

ப்ளூட்டோ கிரகத்தின் ஃபையர்பேஸ் நகரம் மதுவில் கரைந்து கொண்டிருந்தது.

அந்த பிரபல பதிவர் டைட்டானியம் ஹோட்டலின் ஏசி பாரில் வெஞ்சூனை சிப்பிக் கொண்டிருந்தார்.

”ட்ரிங்க்க்க்க்.....ட்ரிங்க்........ட்ரிங்க்க்க்க்க்........ட்ரிங்க்......”

’ஹலோ’

“யெஸ்,ஐ எம் பிரபல பதிவர் ஸ்பீக்கிங்”

...................

“ஒகே....தேங்க் யூ ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்”

பீப்.

www.facebook.com.

"pirapala pathivar" "************" Log In

”search ''aalga'”

"Poke Aalga"

”பேரர்,பில் ப்ளீஸ்””தேங்க் யூ”.

பிரபல பதிவரை கொல்ல பூமியில் இருந்து அனுப்பப்பட்ட ஆல்கா வைரஸ் வெஞ்சூனில் மிதந்து கொண்டிருந்தது.

10.00 PM SaturDay.

9/11 தாக்குதல்-மறைமுக பிணையக் கைதிகள்செப்டம்பர் 11,2001ல் நடைபெற்ற இரட்டைக்கோபுறத் தாக்குதல் சம்பவத்தில் 19 தீவிரவாதிகளுடன் சேர்ந்து மொத்தம் 2,996 பேர் இறந்துள்ளனர்.

ஆனால் இந்த நேரடி இறப்புத்தொகை போக மறைமுகமாக பல இறப்புகள் நடந்துள்ளன.

9/11 தாக்குதல் சம்பவத்திற்கு பின் பயம் காரணமாக நெடுந்தூரப் பயணங்களுக்கு மக்கள் விமானத்தை பயன்படுத்துவதை குறைத்தனர்(12-20% சதவீதம் குறைவு).அதனால் நீண்ட பயணங்களுக்கு சாலைப்போக்குவரத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர்
அவ்வாறு செய்த ஆபத்தான பயணங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 1,595 பேர் இறந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தீவிரவாதிகளின் மறைமுக பிணையக் கைதிகளாக அவர்களுக்கும் தெரியாமலேயே மாறியது சோகமான ஒன்று.

சீல் டீம் சிக்ஸ்

Seal Team Six


அமெரிக்காவின் சிறப்பு போர் மேம்பாட்டுக் குழுவின் ஒரு ரகசியப் பிரிவுதான் இந்த ”சீல் டீம் சிக்ஸ்”(SEAL-SEa,Air,Land).பல விதமான நெருக்கடி சூழ்நிலைகளை இந்த குழு சந்தித்திருந்தாலும் அவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை பிடித்தது மற்றும் சோமாலியாவில் 9 கடத்தல்காரர்களை கொன்றுவிட்டு இரு பணயக் கைதிகளை மீட்ட சம்பவங்கள்தான். 

சீல் டீம் சிக்ஸ் பின்லேடனை பிடிப்பதற்கு முன்பு பின்லேடன் தங்கியிருந்த ஒரு மாதிரி வீட்டை கட்டி நூறு முறைகளுக்கும் மேலான சாத்தியக்கூறுகளை(Probability) உருவாக்கி பயிற்சிகள் எடுத்துக்கொண்டனர்.பாகிஸ்தான் மற்றும் சோமாலியாவில் சீல் டீமின் சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகே அந்த நாட்டின் அரசுகளுக்கு தெரிய வந்திருக்கிறது.

சீல் டீமில் சேர்பவர்களுக்கு மிகக் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும்.தொடர்து மூன்று நாட்கள் ஓய்வின்றி கடுமையான பயிற்சி,கடும்குளிர் வீசும் கடல் நீரில் பல மணி நேரங்கள் இருத்தல்.அதிக பளுவை வெகுநேரம் தூக்கி வைத்திருப்பது என பல கடுமையான பயிற்சிகள் இருக்கும்.

சீல் டீமில் வேலை செய்பவர்கள் யார் யார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.அந்த குழுவில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு கூட அவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது தெரியாது.வருடத்தில் 300 நாட்களுக்கும் மேல் வீட்டிற்கே வராமல் இருக்கும் இவர்களில் 90%
சதவிகிதம் பேருக்கு சீக்கிரம் விவாகரத்து நிகழ்ந்து விடுகிறது.

சீல் டீம் என்ற பெயரே முன்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.அதற்கு முன் வேறு ஒரு போலி பெயரில் இவர்கள் செயல்பட்டு வந்தார்கள்.

தகவல் தொகுப்பு

>>டிவி கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் மக்கள் யாரும் பொறுமையாக அவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்க்க மாட்டார்கள்,எனவே டிவி தயாரிப்பு தோல்வியில் முடியும் என்று டைம்ஸ் இதழில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

>>குறைந்தபட்சம் உங்களைப் போல் தோற்றம் கொண்ட ஆறு பேர் இந்த உலகில் இருக்கலாம்.அவர்களை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்பு 9% சதவீதம் உள்ளது.

>>இந்தியாவில் IQ Level 120க்கு மேல் உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.இவர்கள் மொத்த அமெரிக்க மக்கள் தொகைக்குச் சமம்.

>>ஜாக்கி சான் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு நைட் க்ளப்பில் பவுண்சராக வேலை செய்து வந்தார்.ஒரு முறை அங்கு ஏற்பட்ட சண்டையில் ஜாக்கியின் உள்ளங்கை எலும்பு உடைந்து வெளியே தெரிந்து கொண்டிருந்தது.இரண்டு நாட்களாக அதை சரி செய்ய முயற்சித்த ஜாக்கிக்கு பின்புதான் தெரிந்தது அது வேறு ஒருவனுடைய பல் என்று.

>>மனிதனின் கண்கள் ஒரு டிஜிட்டல் கேமராவாக செயல்பட்டால் அதன் மெகாபிக்சல் 576.

>>அதிக நேரம் தண்ணீரிலேயே இருந்தால் கை மற்றுல் கால் பாதங்களில் உள்ள தோல்கள் சுருங்குவிடுவதை பார்த்திருப்பீர்கள்(அதிக நேரம் குளிக்கும்போது பாருங்கள்).

தண்ணீரில் அதிக நேரம் இருப்பதால் கை காலில் உள்ள தோல் ஊறிவிடுவது அல்லது சோப்பின் தன்மை என்பது தவறான காரணம்.

சரியான காரணம்: ஈரமான பொருட்களை கையாளும்போது ஒரு பிடிமானம் நமக்கு தேவைப்படுகிறது.உதாரணமாக ஒரு மழை நாளில் சாலையில் செல்லும் கார் டையர்களை கவனியுங்கள்.டயர் வழுவழுப்பானதாக இருந்தால் கார் வழுக்கி கீழே விழ வாய்ப்புள்ளது.
அதுபோல நமது மூளையின் செயல்பாடு காரணமாக ஏற்படும் அனிச்சை செயலால் நீரில் இருக்கும்போது பிடிமானத்திற்காக தோலில் சுருக்கம் ஏற்படுகிறது.

>>செல்போன்களில் உங்களுடைய குரலை பதிவு செய்து கேட்டால் உங்களுக்கே அது பிடிக்காமல் போவதையும் சற்று வித்தியாசமாக இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

அதற்கு காரணம் நாம் சாதரணமாக பேசும்போது நமது குரல் ஒலி முழுவதும் காற்றின் வழியில் காதுகளை அடையாமல் சிறிதளவு ஒலி நம் தலையில் உள்ள எலும்புகளில் ஏற்படும் அதிர்வுகள் மூலம் கடத்தப்படுகிறது.

உங்களுடைய உண்மையான குரல் என்பது நீங்கள் செல்போனில் பதிவு செய்து கேட்கும் குரல்தான்.மற்றவர்களுக்கும் அது அப்படித்தான் கேட்கும்.


-கவின்
Related Posts Plugin for WordPress, Blogger...