January 10, 2013

சிம்பன்ஸி குரங்குகள்-சில உண்மைகள்


   
உலகில் உள்ள விலங்குகளில் சிந்த்திக்கும் திறனில் மிகச்சிறந்தவையாக இரண்டு விலங்குகள் உள்ளது.
முதலாவதாக மனிதன் இரண்டாவதாக சிம்பன்ஸிக்கள்.

குரங்குகளில் சிம்பன்ஸிக்கள் மனித இனத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது. இவை ஆப்பிரிக்காவில் மேற்குப் பகுதிகளில் காணப்படுகிறது.

சின்பன்ஸிகள் அன்பு மற்றும் பாசத்துக்குக் கட்டுப்பட்டவை. அன்பானவர்களை பிரிந்தால் மனிதர்கள் மிகவும் வருந்துவார்கள். இந்த உணர்வுக்கு சிம்பன்ஸிகளும் சளைத்தவை கிடையாது.

சிம்பன்ஸிக்களின் அறிவுத்திறனுக்கு உதாரணமாக,ஒரு விதையினை ஒரு கல்லை கொண்டு சரியான அளவு அழுத்தம் கொடுத்து விதையில் உள்ள பருப்பு உடையாமல் ஓட்டை மட்டும் சரியாக உடைப்பது,எறும்பு புற்றில் ஒரு நீண்ட குச்சியினை வைத்து, அதில் எறுப்ம்புகள் ஏறியவுடன் அப்படியே உண்பது போன்றவை.

வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் சிம்பன்ஸிக்கள் டிவி சேனலை மாற்றுவது, ஓவியம் வரைவது,என இன்னும் பலவற்றை சொல்லலாம்.



இவ்வளவு அறிவுள்ள சிம்பன்ஸிக்கள் இதே அளவு ஆபத்தும் உள்ளது.
சிம்பன்ஸிக்கள் மனிதர்களைப்போலவே நாம் அவர்கள் என்று அணி அணியாக வாழ்பவை.

எதிரணியில் உள்ள குரங்குகளை தாக்க செல்லும்போது இவை சத்தமின்றி ராணுவத்தைப்போல வரிசைகட்டி செல்வது ஆச்சரியமான ஒன்று.

எதிரணியில் உள்ள ஒரு சிம்பன்ஸி இவைகளிடம் சிக்கினால் அவ்வளவுதான்,,மிகக்கொடூரமாக தாக்கி கை கால் மற்றும் விறைகளை பிய்த்து கொடூரமாக கொலை செய்யும்
.

இதற்கு காரணம் இவற்றிற்கு இந்த கொல்லும் விளையாட்டில் கிடைக்கும் மனமகிழ்ச்சியே காரணம்
.
                                                    
செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் சிம்பன்ஸிக்கள் சில நேரம் வளர்ப்பாளரையே கொடூரமாக தாக்கிய சம்பவங்களும் உண்டு.எனவே இந்த கொடூர செல்லப்பிராணியை வளர்க்க தனி தைரியம் வேண்டும்.


















பொதுவாக செல்லபிராணிகள்,குரங்குகள்,போன்றவை மனிதர்களை தாக்குவதற்கு காரணம்,அவை சிறுவயதில் அதன் சூழல் மற்றும் குடும்பத்தில் இருந்து பிரித்துவரப்பட்ட நினைவுகளால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணாமக அமைகிறது.

இந்திய யானைகளில் இது அதிகமாகவே காணப்படுவது உண்மை.

மாறிவரும் மாணவர் கல்வி


தமிழநாட்டில் இன்று எல்லா பள்ளிகளிலும் பின்பற்றிக்கொண்டிருக்கும் கல்வி முறை மாணவர்களின் கற்றல்,ஆராய்தல்,அறிதல் திறனை மேம்படுத்துகிறதா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

பெரும்பாலான பள்ளிகளில் ’ப்ராஜெக்ட்’ என்கிற பெயரில் மாணவர்களின் ’சுய சிந்தனை’ திறன் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் முடக்கப்பட்டு வருகிறது.!

கல்வியியல் கல்லூரி மாணவர்கள் செய்யக்கூடியது போன்ற ப்ராஜெக்டுகளை பள்ளி மாணவர்களிடம் கொடுத்து செய்யச்சொல்வதால் அவர்களின் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு அதை செய்து கொடுத்து தங்கள் அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள்.

ஆசிரியர்கள் ஏதாவது ஒரு தலைப்பை கொடுத்து ஒரு கட்டுரை எழுதிக்கொண்டு வரச்சொல்லும்பொழுது கூடவே, இணையதளத்தில் பார்த்து எழுதிட்டு வரச்சொல்கிறார்கள்.

பக்கத்து வீட்டில் ஒரு பையன் எட்டாம் வகுப்பு படிக்கிறான்.அவனுடைய ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதச்சொல்லி ’பொங்கல் பண்டிகை’ எனத் தலைப்பையும் கொடுத்துவிட்டிருந்தார்.
கூடவே அவர் இணையத்தை பார்த்து எழுதி வரச்சொல்லியிருக்கிறார்!

இது ஒரு சிறிய உதாரணமே.

இந்த தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றால் ஒரு நிமிடம் உட்கார்ந்து சிந்தித்தாலே போதும், அந்த மாணவ்ர்கள் எழுத முடியும்.

தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடி வரும் பொங்கல் பண்டிகையை கூட இணையதளத்தில் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு மாணவர்கள் மாறி வருகிறார்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள்!!

~இதில் எங்கிருந்து ஒரு மாணவனின் சுயசிந்தனை பிற்காலத்தில் வெளிப்பட்டு அவனை தனித்துக்காட்டும்.??

உலக அளவில் மேலும் நம்மவர்கள் அடுத்தவரிடம் கைகட்டி நின்று சம்பளம் வாங்கும் நிலை தொடருமே தவிர, இந்தியாவில் இருந்து ஒரு பில்கேட்ஸ் கூட இனிமேல் உருவாக முடியாத சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது.!

January 7, 2013

டீன் மெச்சூரிட்டியும் சமூக குற்றங்களும்-ஒரு பார்வை

இன்றைய சூழலில் 12 வயதில் உள்ள ஒரு டீன் ஏஜ் சிறுவன்/சிறுமி பெரியவர்களுக்கே உரிய மெச்சூரிட்டியை கொண்டுள்ளார்கள்.
அவ்வாறு அவர்கள் கொண்டுள்ள இந்த குணங்களால் அவர்களுக்கு நன்மைதானா என்றால் நிச்சயமாக இல்லை!

அந்த மெச்சூரிட்டி மைண்ட்’டை அவர்களால் கையாள இயலாதபோதுதான் பாலியல்,திருட்டு,கொலை போன்ற குற்றங்கள் நடைபெறுகிறது காரணம்!

நீங்கள் ஒன்றை கவனித்திருக்கலாம், இந்த நூற்றாண்டில் பிறந்த குழந்தைகள் அதன் 2 அல்லது 3 வயதை எட்டுபோது அது ஒரு பெரிய மனிதனை போல் பேசுவதும்,கோபம் வந்தால் பொருள்களை தூக்கி உடைப்பதும்,
வீட்டை விட்டு வெளியேறுவதும் பொதுவாக பார்க்க வேண்டிய விஷயமில்லை! பெற்றோர்கள் இதைப்பார்த்து சந்தோஷப்படுவதுதான் உச்சகட்ட கொடுமை!

அந்த குழந்தை வளர வளர அதன் மனதில் இந்த உணர்சிகள் ஒரு அனிச்சை செயல்போல பதிவாகி அக்குழந்தை வளர்ந்ததும் அதே போல் நடந்து கொள்கிறது!

டீன் ஏஜ்’ஜில் என்னதான் மெச்சூர் ஆக இருந்தாலும் அதை சரியான பாதையில் வழிநடத்த தவறுவது சமூக குற்றங்களில் மாணவர்களை ஈடுபட வைக்கிறது.

சிறுவர் குற்றங்களில் பெரும்பாலும் மாணவர்களின் பெயர் அடிபடுவது நம் கல்வி முறையின் கையாலாகாத்தனமாகவே தோன்றுகிறது.!

சட்டங்கள் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் இந்த அடிப்படை விஷயங்களை கவனித்து நடவடிக்கை எடுக்காமல் போனால் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை!

கோபத்தில் கொலை செய்த பின் தண்டனை வாங்கி தருவது ஒன்றும் சிறப்பு அல்ல.!
கோபமே வராமல் தடுக்க என்ன வழியோ அதை செய்வதே சிறந்தது!


Related Posts Plugin for WordPress, Blogger...