May 17, 2013

மனிதனை தின்ற நாய்கள்

2011 ஆகஸ்ட் மாதம் ஆண்ட்ரி லம்பொசா என்ற இந்தோனேஷியர் தனது விடுமுறையை கொண்டாட இரண்டு வாரங்களுக்கு வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுகிறார்.
லம்பொசா  அவர் வீட்டில் ஒன்பது நாய்களை வளர்த்து வருகிறார்.விடுமுறையை கொண்டாட அவர் வெளியூர் செல்லும்போது அவர் வளர்க்கும் நாய்களுக்கு எந்த வித உணவு,தண்ணீர் முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை.
முதல் சிறிது நாட்களுக்கு அந்த ஒன்பது நாய்களில் உள்ள இரண்டு பலவீனமான சிறிய நாய்களை மற்ற ஏழு நாய்களும் கொன்று தமக்கு உணவாக்கி கொண்டுள்ளதாக தெரிகிறது.
ஆகஸ்ட் 31ந் தேதி லம்பொசா வீடு திரும்புகிறார்,
தனது உடைமைகளை வீட்டின் வாசலிலேயே வைத்துவிட்டு,இரண்டு
வாரங்களாக தான் வீட்டில் இல்லாததால் லம்பொசாவின் நாய்கள் அவரை ஓடி வந்து வரவேற்கும் என்று எண்ணியபடி கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
ஆனால் நடந்ததோ வேறு,,
பெரும் பசியில் இருந்த அந்த ஏழு ஊனுண்ணிகளும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு சதைப்பிண்டத்தை கண்ட வெறியில் லம்பொசா மீது பாய்ந்து கடித்து குதறி வீடு முழுவதும் இரத்தக்களறியாக்குகின்றன.


The dogs that were unfed for 2 weeks, before attacking their owner

 சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின்,அவ்வழியே வந்த லம்பொசாவின் பக்கத்து வீட்டுக்காரர்,வெகுநாட்களாக லம்பொசாவின் பயண உடைமைகள் வெளியே கிடப்பதை கண்டு லம்பொசாவின் வீட்டிற்கு அருகில் சென்று பார்த்திருக்கிறார்.வீட்டின் உள்ளே இருந்து ஏதோ துர்நாற்றம் வீச உடனே காவல்துறைக்கு தகவல் சொல்லியிருக்கிறார்.

காவல்துறையினர் வந்து நாய்களை கவனமாக அப்புறப்படுத்திய பின் அங்கே சிந்திக்கிடக்கும் சதைத்துளிகள் லம்பொசாவினுடையது என கண்டுபிடிக்கின்றனர்.



Facebook Comment Box

5 comments:

  1. கொடுமை...

    உணவு, தண்ணீர் ஏற்பாடு செய்து விட்டு சென்றிருக்கலாம்...

    தங்களின் கருத்து மூலம் தான் உங்கள் தளம் அறிந்தேன்... நன்றி... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் நண்பரே. . .!

      Delete
  2. வணக்கம் நண்பரே... சேட்டைக்காரன் தளத்தில் தாங்கள் அளித்துள்ள கருத்துரையின் மூலம் தங்கள் தளத்தை அறிந்தேன்... என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்..!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...