July 3, 2013

ஹாலிவுட் மக்களுக்கு சொல்வது என்ன?


1.சீனர்கள் குங்-ஃபூ சண்டை போடுவதை தவிற வேற ஒன்றும் தெரியாதவர்கள்.

2.அமெரிக்கர்களில் 50% பேர் FBI மற்றும் CIA’வின் ஏஜெண்டுகளாக பணிபுரிபவர்கள்.இவர்கள் அனைவருக்கும் எப்பொழுதும் ஒரு UnderCover Operation இருந்துகொண்டே இருக்கும்.

3.அமெரிக்காவில் பள்ளிகள் இருப்பது Baseball மற்றும் Basket Ball விளையாடுவதற்காக மட்டுமே.


4.ஏலியன்களுக்கு அமெரிக்காவைத் தவிற வேறு எந்த நாடும் பிடிக்காது.

5.அமெரிக்காவில் போலீசை விட திருடர்களுக்கு மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

6.அமெரிக்க போலிசாரின் வேலை டீ குடிப்பது மற்றும் பர்க்கர் சாப்பிடுவது மட்டும்தான்.

7.மினி பீர் ஒவ்வொருவர் கையிலும் கட்டாயம் இருக்கும்.

8.பள்ளிக்கூடம் பக்கமே போகாதவன்தான் கம்ப்யூட்டர் ஹேக்கிங்’கில் எக்ஸ்பெர்ட்டாக இருப்பான்.

9.ஒவ்வொரு காரும் வெடிப்பதற்காகவே படைக்கப்பட்டவை.

10.பாரிஸ் நகரில் உள்ள எந்த ஜன்னல் வழியாக பார்த்தாலும் ஈஃபில் டவர் தெரியும்.

11.அனைத்து டிடெக்டிவ் அதிகாரிகள் வேலை நீக்கம் செய்யப்பட்ட பிறகுதான் குற்றங்களை கண்டுபிடிப்பார்கள்

12.பாஸ்போர்ட் சைஸில் காதலியின் போட்டோ ஒவ்வொரு ராணுவ வீரர்களிடமும் இருக்கும்.

13.அமெரிக்க சிறுவர்/சிறுமிகள் Fuck You,Ass hole என்று சொல்வது ஒன்றும் ஆச்சர்யமான விசயம் அல்ல.

14.டிவி’யில் எப்பொழுதும் ஒரு பரபரப்பான செய்தி(குண்டுவெடிப்பு,ஏலியன் தாக்குதல்கள்)ஒன்று ஓடிக்கொண்டு இருக்கும்.அதை அந்த மாகாணத்தின் கவர்னர் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்.

15.ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்களுக்கும்(Spiderman,Superman..) ஒரு காதலி இருப்பார்கள்.

No comments:

Post a Comment