January 10, 2013

மாறிவரும் மாணவர் கல்வி


தமிழநாட்டில் இன்று எல்லா பள்ளிகளிலும் பின்பற்றிக்கொண்டிருக்கும் கல்வி முறை மாணவர்களின் கற்றல்,ஆராய்தல்,அறிதல் திறனை மேம்படுத்துகிறதா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

பெரும்பாலான பள்ளிகளில் ’ப்ராஜெக்ட்’ என்கிற பெயரில் மாணவர்களின் ’சுய சிந்தனை’ திறன் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் முடக்கப்பட்டு வருகிறது.!

கல்வியியல் கல்லூரி மாணவர்கள் செய்யக்கூடியது போன்ற ப்ராஜெக்டுகளை பள்ளி மாணவர்களிடம் கொடுத்து செய்யச்சொல்வதால் அவர்களின் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு அதை செய்து கொடுத்து தங்கள் அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள்.

ஆசிரியர்கள் ஏதாவது ஒரு தலைப்பை கொடுத்து ஒரு கட்டுரை எழுதிக்கொண்டு வரச்சொல்லும்பொழுது கூடவே, இணையதளத்தில் பார்த்து எழுதிட்டு வரச்சொல்கிறார்கள்.

பக்கத்து வீட்டில் ஒரு பையன் எட்டாம் வகுப்பு படிக்கிறான்.அவனுடைய ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதச்சொல்லி ’பொங்கல் பண்டிகை’ எனத் தலைப்பையும் கொடுத்துவிட்டிருந்தார்.
கூடவே அவர் இணையத்தை பார்த்து எழுதி வரச்சொல்லியிருக்கிறார்!

இது ஒரு சிறிய உதாரணமே.

இந்த தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றால் ஒரு நிமிடம் உட்கார்ந்து சிந்தித்தாலே போதும், அந்த மாணவ்ர்கள் எழுத முடியும்.

தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடி வரும் பொங்கல் பண்டிகையை கூட இணையதளத்தில் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு மாணவர்கள் மாறி வருகிறார்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள்!!

~இதில் எங்கிருந்து ஒரு மாணவனின் சுயசிந்தனை பிற்காலத்தில் வெளிப்பட்டு அவனை தனித்துக்காட்டும்.??

உலக அளவில் மேலும் நம்மவர்கள் அடுத்தவரிடம் கைகட்டி நின்று சம்பளம் வாங்கும் நிலை தொடருமே தவிர, இந்தியாவில் இருந்து ஒரு பில்கேட்ஸ் கூட இனிமேல் உருவாக முடியாத சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது.!

2 comments:

  1. sorry here no tamil fonts

    just now seen vawval comments.

    very good write up. with social awareness.

    good.

    best of luck

    ReplyDelete